மித்தெனிய பகுதியில் உள்ள ஒரு காணியில் இருந்து சம்பத் மனம்பேரியால் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது இரண்டு தங்க நிற மெகசின்கள், ஒரு 9 மிமீ பிஸ்டல், ஒரு கைக்குண்டு மற்றும் 115, T-56 தோட்டாக்கள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரியி மற்றும் பெக்கோ சமனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பெக்கோ சமன் இந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை 2 மாதங்களுக்கு முன்பு சம்பத் மனம்பேரியிடம் கொடுத்ததாகவும், அவை அவரது நெருங்கிய ஒருவரின் வீட்டில் புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 03ஆம் திகதி காணி ஒன்றில் இந்த ஆயுதங்களை புதைத்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிதெனிய – தலாவ பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பத் மனம்பேரி, கடந்த 17ஆம் திகதி வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, விசாரணை செய்ய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
