மந்திரிமனைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

யாழில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரபுரிமை சின்னமான மந்திரிமனைக்கு முன்பாக இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழில் கடந்த 17ஆம் திகதி பெய்த கனத்த மலை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பாகம் இடிந்து வீழ்ந்தது.

இந்நிலையில் அதனை பாதுகாக்குமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தின் போது,

இலங்கை அரசே தமிழர்களின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு,
இந்த இடத்தை உரிமை கோருபவரே மந்திரி மனையை இடித்துவிட்டு உல்லாச விடுதியா கட்டப்போகின்றீர்கள்,
தொல்லியல் திணைக்களமே பௌத்த சின்னங்களை பாதுகாப்பதுபோல் தமிழரின் மரபுரிமை சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடு,
மன்னன் சொத்து மக்கள் சொத்து,
தனிநபரே உரிமை கொண்டாடாதீர்கள்

முதலான வாசகங்கள் கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply