எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய பாதிப்பு- இழப்பீட்டை வழங்க மறுப்பு!

இலங்கை கடற்பரப்பில் யணித்த போது சிங்கப்பூருக்கு சொந்தமான எக்ஸ் பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பல் தீப்பற்றுதலுக்கு உள்ளானமையால், ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளது.

சிங்கப்பூருக்கு சொந்தமான எக்ஸ் பிரஸ் பேர்ள் (MV X-Press Pearl) கப்பல் 2021 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் பயணித்த போது தீப்பற்றுதலுக்கு உள்ளாகியமையால், நாட்டின் கடல் வளம் பாரிய அளவில் மாசடைந்ததுடன், கடல் வாழ் உயிரினங்களும் இறந்து கரை ஒதுங்கியிருந்தன.

இந்நிலையில் அதற்குரிய இழப்பீடாக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்த வேண்டும் என அந்த கப்பலின் நிறுவனமான X-Press Feeders நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

எனினும் அந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு குறித்த நிறுவனம் மறுப்பு வௌியிட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply