அரச சேவைகளை இலகுபடுத்த ‘அரசாங்க சூப்பர் அப்’!

தனியான கணினி செயலி மூலம் பொதுமக்கள் அரச சேவைகளை அணுகும் வகையில் ‘அரசாங்க சூப்பர் எப்’ ஒன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒன்றுக்கொன்று வித்தியாசமான முறைமைகள், பல்வித அத்தாட்சிப்படுத்தும் செயன்முறைகள் மற்றும் பல்வேறு அரச திணைக்களங்கள் மூலம் மீண்டும் மீண்டும் தரவுகளை உட்சேர்ப்பதற்குத் தேவையான அரச சேவைகளை வழங்குவதற்காக சமகாலத்தில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான அணுகுமுறைகளால், பிரஜைகளுக்கு குறிப்பிடத்தக்களவு சிரமங்கள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதன்மூலம் வருடாந்தம் 500 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பொருளாதாரப் பாதிப்புக்கள் ஏற்படுகின்றமையும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால், இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத் திட்டத்திற்கமைய, பிரஜைகளுக்கு தனியான கணணி செயலியொன்றின் மூலம் அரச சேவைகளை வழங்குவதற்காக, விரிவான விடயங்களை உள்ளடக்கக் கூடிய வகையில் ‘அரசாங்க சுப்பர் அப்’ செயலியை (Government SuperApp) அபிவிருத்தி செய்வது மூலோபாய முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அனைத்து அரச சேவைகளையும் பொதுவானதொரு பயனர் நேயம்மிக்க கைத்தொலைபேசி மற்றும் இணைய செயலியாக ஒருங்கிணைத்து, இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட 14 மில்லியன் பிரஜைகளுக்கும், மற்றும் வருடாந்தம் 02 மில்லியன்கள் அணுகக்கூடிய உபதிரை மூலம் அரச சேவைகளுக்குத் தடையின்றி அணுகுவதற்கான இயலுமையை வழங்கும் டிஜிட்டல் தளமொன்று இக்கருத்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ‘அரசாங்க சுப்பர் அப்’ செயலியை (Government SuperApp) செயலி 02 கருத்திட்டப் படிமுறைகளின் கீழ் 500 மில்லியன் ரூபாய்கள் மொத்தச் செலவில் 2025-2026 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply