ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்க நேரப்படி காலை 8:50 மணியளவில் அமெரிக்காவின் ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் அவரது குழுவினர் வரவேற்றுள்ளனர்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் இந்த விஜயத்தில் பங்கேற்றுள்ளார்.

இந்தநிலையில் இன்றையதினம் (24) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் உரையாற்றவுள்ளார்.

மேலும் இந்த விஜயத்தின் போது ​​ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply