முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சியை கடுமையாக எச்சரித்த சாகர காரியவசம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி அவர்களுக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கடுமையான எச்சரிப்பு விடுத்துள்ளார்.

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கூறி தொலைபேசி மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சமீப காலங்களில் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளினால் கட்சிக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

இதன் காரணத்தினால் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இந்த கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸகுட்டி ஆராய்ச்சியை நாளை (25) கட்சி அலுவலகத்திற்கும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply