தியாகி திலீபனின் 38வது நினைவு தினம்- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இரத்ததான நிகழ்வு!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 38வது நினைவு தினம் உணர்வுபூர்வமாக தமிழர் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இரத்ததான நிகழ்வு இன்றையதினம் (24)  ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முன்றலில் கைலாசபதி கலையரங்கிற்கு அருகாமையில் இந்த இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமானோர் இணைந்து கொண்டு இரத்த தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply