இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள தீர்மானம்!

இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள், தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை வேலைநிறுத்தமாக விரிவடையாது என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் சட்டப்படி வேலை செய்யும் (Work-to-Rule) போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

மின்சார சபை ஊழியர் சங்கங்கள் கடந்த 04ஆம் திகதி முதல் நாடு தழுவிய சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்து வந்தனர்.

இலங்கை மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு அதாவது இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மூன்று கட்டங்களாக நடத்த இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்கள் முடிவு செய்திருந்தன.

அதன்படி முதல் கட்டமாக, சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை கடந்த 04ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply