தலாவ பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து- மூவர் பலி!

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வேனும், எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது வானின் ஓட்டுநர் மற்றும் லொரி ஓட்டுநர் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களுள் வானில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply