தலாவ பகுதியில் அதிகாலை இடம்பெற்ற விபத்து- உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியின் தலாவ-மீரிகம சந்திக்கு அருகிலுள்ள மொரகொட பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.

இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

அனுராதபுரத்திலிருந்து குருணாகலை நோக்கிச் சென்ற லொறியும், குருணாகலையிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தின்போது வானின் ஓட்டுநர் மற்றும் லொரி ஓட்டுநர் உட்பட ஏழு பேர் காயமடைந்த நிலையில் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதன்போது வானில் பயணித்த மூன்று பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் நிலை மோசமாக இருந்த காரணத்தினால் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

ஏனைய இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களில் வேன் சாரதி உட்பட நான்கு பேர் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply