பெக்கோ சமனின் மனைவி ஷாதிகாவுக்கு விளக்கமறியல் காலம் நீடிப்பு!

பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 9ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி இன்று (25) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவைப் பிறப்பித்தார்.

மித்தேனியவைச் சுற்றியுள்ள போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் சந்தேக நபர் எவ்வாறு ஈடுபட்டார் என்பதைக் குறிக்கும் சாட்சியச் சுருக்கத்தையும் அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply