2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம், தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு எனப்படும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்ட உரை நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதியால் நவம்பர் 7 ஆம் திகதி முனவைக்கப்படும்.

வரவு செலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் 8 முதல் நவம்பர் 14 வரை 6 நாட்களுக்கு நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6:00 மணிக்கு நடைபெறும்.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும் என்றும் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply