ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 22ஆம் திகதி இரவு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அதனை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி நேற்று இரவு (25) ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பான் நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ஜனாதிபதி, செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் 30 வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்கிறார்.

இந்த பயணத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் வௌிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத்தும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply