பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய இந்த தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் இருந்து T-56 ரக 4 மெகசின்களும், மைக்ரோ பிஸ்டலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘கெஹெல்பத்தர பத்மே’ என அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி உள்ளிட்ட பல பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் சமீபத்தில் இந்தோனேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டு பின்னர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்களை தடுத்து வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
