தமிழர் பகுதி எங்கும் தியாகி திலீபனுக்கு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது ஆண்டு நினைவேந்தல் வடக்கு – கிழக்கு பகுதிகளில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்றையதினம் (26) இறுதி நாள் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படுகிறது.

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த திலீபனின் 38வது நினைவு தினம் இன்று யாழ். நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவிடத்தில் நடைபெற்றது.

இங்கு தாயாகி திலீபன் ஆகுதியான நேரமான காலை 10.48 மணிக்குச் சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேபோல் பருத்தித்துறையில் உள்ள தியாகி திலீபனின் நினைவாலயத்திலும் காலை 8 மணிமுதல் அடையாள உண்ணாவிரதத்துடன் வடமராட்சி மக்களால் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மவீரர்களான புட்சித்தமிழ், அவர்களது பெற்றோர் பரஞ்ஜோதி தவமணி அவர்களால் பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டது

இந்த நிகழ்வில் பருத்தித்துறை மௌலவி, இந்து சமய குரு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியிலும் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

புதுக்குடியிருப்பு வர்த்த சங்க தலைவர் நவநீதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வில், புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் தங்களது கடைகளை மூடி தீயாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மேலும் திருகோணமலை சிவன் கோயிலடி முன்றலிலும் தியாகி திலீபனுக்கு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. இதனை சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றினைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்வாறு தமிழர் பகுதி எங்கும் தியாகி திலீபனுக்கு உணர்வுபூர்வமாக நினைவஞ்சலி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply