சம்பத் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (26) அனுமதி வழங்கியுள்ளது.
மித்தெனிய பகுதியில் ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்களை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு அவர் இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.
மேலும் குறித்த காணியில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரை எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலஸ்முல்ல நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
