மஹியங்கனை பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (26) இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பதுளை பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனுராதபுரத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சொரபோர வெவ முதலாம் தூண் பகுதியில் வேன் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது வேனில் பயணித்த 11 பேர் காயமடைந்து மஹியங்கனை வைத்தியசாலை மற்றும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 6 பேர் பதுளை வைத்தியசாலையிலும், 5 பேர் மஹியங்கனை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
