கொட்டாவை பகுதியில் நூற்றுக்கணக்கான தோட்டாக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை, அங்குலான பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 458 தோட்டாக்கள் மற்றும் ஒரு T-56 கோப்பு மற்றும் 75 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், 30 போலி வாகன இலக்கத்தகடுகள், 15 வாகன வருமான உத்தரவு பத்திரங்கள், 15 காப்பீட்டுச் சான்றிதழ்கள் மற்றும் இரண்டு கையடக்க தொலைபேசிகள் முதலானவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றவியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
