கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு- இருவர் வைத்தியசாலையில்!

கிளிநொச்சி – தட்டுவான்கொட்டி பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (29) காலை 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த வேளையில் நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு திடீரென வெடித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply