உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழந்த சோகம்!

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற முல்லைத்தீவு மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு கற்சிலைமடுவைச் சேர்ந்த பாணுசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவன் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.

சிறுநீரக மாற்று சிகிச்சை பயனளிக்காமல் போகவே நேற்றையதினம் (29) இரவு உயிரிழந்துள்ளார்.

உயர்தர தொழிநுட்ப துறையில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply