பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.
பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் நாட்டில் இருந்து வௌியேறிய பின்னணியில் காணப்படும் வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்காமை, சம்பளப் பிரச்சினை, ஆராய்ச்சிக்கான நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வு கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்தின் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல்கலைக்கழகங்களின் விரிவுரைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கொழும்பு, பேராதனை, ருஹுணு, ரஜரட்ட, யாழ்ப்பாணம் உட்பட நாடு முழுவதும் உள்ள பல அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரைகள் உட்பட அனைத்து கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

