இன்று சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம்!

இன்றையதினம் உலக குழந்தைகள் தினம் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது.

“அன்பால் பாதுகாக்கவும் – உலகை வெல்வதற்கு” என்ற கருப்பொருளில் சர்வதேச குழந்தைகள் தினமும், “தலைமுறை ஒன்றை உருவாக்கிய தலைமுறையைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச முதியோர் தினமும் கொண்டாடப்படுகின்றது.

தேசிய குழந்தைகள் தின வாரம் செப்டம்பர் 25 முதல் செயல்படுத்தப்பட்டு வருவதோடு, இன்று முதல் ஒக்டோபர் 7 வரை முதியோர் தின கொண்டாட்ட வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சிறுவர் தினம் முன்னெடுக்கப்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply