நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (01) காலை நாடு திரும்பியுள்ளார்.

ஐ. நாவின் 80ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.

அதனைத் தொடர்ந்து ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செப்டம்பர் 27ஆம் திகதி காலை ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

இந்த விஜயத்தின் போது வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் ஆகியோர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் சென்றிருந்தனர்.

அதன்படி உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு அவர்கள் அனைவரும் இன்று காலை 09.30 மணிக்கு தாய்லாந்தின் பொங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-403 விமானம் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply