லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மாதாந்திர விலை திருத்தத்தின்படி ஒக்டோபர் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 4,100 ஆகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,645 ஆகவும் காணப்படுகிறது.
அதேபோல லிட்ரோ எரிவாயு விலையிலும் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
மாதாந்திர விலை திருத்தத்தின்படி ஒக்டோபர் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3690 ஆகவும், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,482 ஆகவும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694 ஆகவும் காணப்படுகிறது
