கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் 31 வெடிக்காத குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று (01) பிற்பகல் 2:30 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முகமாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளர் ஒருவர் தமது வீட்டில் பள்ளம் தோண்டியபோது, ஆபத்தான குண்டுகள் இருப்பதை அவதானித்த நிலையில், உடனடியாக பளை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், பாதுகாப்பான முறையில் குண்டுகளை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
