முல்லைத்தீவு பகுதியில் தோட்ட காணி ஒன்றில் இருந்து வெடிபொருட்களுடன் புலிக்கொடி மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆ பகுதியிலுள்ள 168ஆம் இலக்க தென்னம் தோட்ட காணியினை உரிமையாளர் துப்பரவு செய்துகொண்டிருந்த வேளையில், காணியில் ஆர்.பி.ஜி ரக குண்டுகள், புலிக்கொடி போன்றவை இருந்துள்ளமையை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் நீதிமன்ற அனுமதியுடன் விஷேட அதிரடிப்படையினரின் உதவியுடன் அப்பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
