சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தலினை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இணையவழி விண்ணப்பம் செப்டம்பர் 18ஆம் திகதி முதல் இணையவழி ஊடாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் இணையவழி விண்ணப்பக் காலம் ஒக்டோபர் 9ஆம் திகதி அன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு மூடப்படும் என்று இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி எந்த காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும், இறுதி திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயம் என்றும் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏதேனும் வினவ வேண்டுமானால் 0112-784208/ 0112-784537/ 0112-785922 ஆகிய தொலைபேசி இக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 0112-784422 என்ற தொலைநகல் எண் அல்லது gceolexansl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் வினவ முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply