யாழ். நவாலி பகுதியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த காணியை பண்படுத்திய வேளையில் இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து மானிப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

குறித்த பகுதிக்கு விரைந்த மானிப்பாய் பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து அவ்விடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

குறித்த வெடிபொருட்கள் இன்றைய தினம் (03) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் சேட அதிரடிப் படையினரால் அகற்றப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply