நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்றையதினம் (03) மூடப்படும் என்று இலங்கை மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி சர்வதேச மது ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதற்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச மது ஒழிப்பு தினமானது, மதுவிலக்கு இயக்கம் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், மது பானங்களை மிதமாக உட்கொள்ள அல்லது பல சந்தர்ப்பங்களில் முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
அதன்படி இன்றையதினம் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என்று மதுவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
