நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல்!

நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வழியாக சுங்க வரி செலுத்தாமல் அதிக பெறுமதியான கைடயக்க தொலைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவந்த வேளையில் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 26 ஸ்மார்ட் போன்கள், 10 ஐபேட்கள், 10 டெப்கள், 3 மடிக்கணினிகள், பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் மற்றும் கிரீம்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 30 ஆம் திகதி டுபாய்க்குச் சென்ற சந்தேகநபர்கள், நேற்று (2) நாடு திரும்பிய வேளையில் ​​இந்தப் பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பில் மாளிகாவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.பி.எஸ். கல்யாணதுங்கவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாளிகாவத்தை ரம்யா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது ஒரு வீட்டிலிருந்து இந்தப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாளிகாவத்தை மற்றும் கொச்சிக்கடை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply