சட்டவிரோத தங்க தொகையுடன் இருவர் கைது!

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் சட்டவிரோத தங்க தொகையுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கற்பிட்டி ஏலத் தோட்டம் மற்றும் ஆனவாசலை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கற்பிட்டி களப்பின் அரிச்சல் கடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 கிலோ 454 கிராம் தங்கம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அத்துடன் குறித்த தங்கத்தை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த தங்க தொகை சூட்சுமமாக கொண்டு செல்லக்கூடிய வகையில் மீன்பிடி வலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஈயமாக தயார்ப்படுத்தப்பட்டிருந்ததாக கடற்படை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply