கிளிநொச்சி பகுதியில் ஆசிரியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கிளி/ சென் திரேசா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் விடுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் பேரம்பலம் பரந்தாமன் என்ற ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திருவையாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் குறித்த ஆசிரியர், கிளி/ சென்திரேசா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் விடுதியில் தங்கியிருந்த வேளையில் தனக்குத் தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் மீதான விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜீவநாயகம் மேற்கொண்டார்.
பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
