வாள்களுடன் கைது செய்யப்பட்ட யாழ் இளைஞன்!

யாழ்ப்பாணம், பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (07) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

24 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து மூன்று வாள்கள் மற்றும் கையடக்க தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபர் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்ததாகவும், சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே சில குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சாமோவ தொடர்பிலான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, அவரை இன்று (08) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply