பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் மாத்தறை, வெல்லமடம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மாத்தறை, வெல்லமடம பகுதியில் உள்ள வீதித் தடையில் இருந்த பொலிஸார் காரை நிறுத்துமாறு சைகை காட்டிய வேளையில், பொலிஸாரின் உத்தரவை மீறி கார் பயணித்துள்ளது.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் காரை நோக்கி பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
நிற்காமல் சென்ற காரானது பின்னர் மாத்தறை, ஜனராஜா மாவத்தையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் இரண்டு பேர் பயணித்திருந்த நிலையில், அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
எனினும் காரின் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
