நாட்டில் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்- தடுக்கு நோக்கில் அதிவிசேட வர்த்தமானி!

சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவி வருகின்றது. இதனை தடுக்கும் நோக்கில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளரால் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி 1992 ஆம் ஆண்டு 59ஆம் இலக்கம் கொண்ட விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அபாயப் பகுதிகளாகவும், பன்றிகள் நோய் அபாய விலங்குகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானி அறிவிப்பு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அமுல்படுத்தபட்ட திகதியிலிருந்து 03 மாதங்களுக்கு மிகாமல் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நோய் சூழ்நிலையைப் பொறுத்து காலத்தை நீட்டிக்க முடியும் என்றும் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய, பன்றிக் காய்ச்சல் ஆபத்துப் பகுதிகளில் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சில நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply