யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குருதி வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ‘ஓ பொசிடிவ்’ குருதி வகைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் தீவிரமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே ‘ஓ பொசிடிவ்’ வகை குருதி உடையவர்கள், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேரடியாக வருகை தந்து குருதிக் கொடையில் ஈடுபடுமாறு வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
