முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் போது விவசாய வேலைகளுக்காக இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடத்திய விசாரணைக்கு அமைய தாம் கைது செய்யப்படுவதற்கு முன்னர், முன்பிணையில் விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார மனு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த முன்பிணைக் கோரிக்கையை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
