செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட அணையா விளக்கு போராட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபி விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வரவேற்கிறது வளைவுக்கு அருகில் கடந்த ஜூன் மாத இறுதியில் செம்மணி படுகொலைக்கு நீதி கோரி அணையா விளக்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தின் முடிவில் அதன் நினைவாக அப்பகுதியில் அணையா விளக்கு நினைவு தூபி ஒன்றும் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் குறித்த நினைவு தூபியை விசமிகள் சேதப்படுத்தியுள்ளனர்.
