யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையாற்றி வந்த வைத்தியர் ஜமுனானந்தா, இன்றையதினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளராக கடமையேற்க உள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 06 வருடங்களாக பிரதி பணிப்பாளராக பணியாற்றி வந்த வைத்தியர் ஜமுனானந்தா நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றார்.
அதன்படி இன்று (10) அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையை பொறுப்பேற்க உள்ளார்.
இந்தநிலையில் வைத்தியர் ஜமுனானந்தாக்கு நேற்று யாழ். போதனா வைத்தியசாலையில் பிரியாவிடை நிகழ்வு கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் உள்ள மருத்துவமனையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு, அவரது சேவையை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
