சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பயணத் தொகையை விட அதிகமாக பணம் பறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்புல்கொட மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 48 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலாவுக்காக நாட்டுக்கு வந்த பிரேசில் மற்றும் பெல்ஜியப் பெண்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பணத்திற்கும் மேலதிகமாக ரூ. 10,000 மற்றும் ரூ. 30,000 ஐ அறவிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் சுற்றுலாப் பிரிவுக்கு கிடைத்த இரு முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக கறுவாத்தோட்டம் மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
