வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இந்திக்க கப்பு கொட்டுவ நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வந்த சாமந்த விஜயசேகர மேல் மாகாணத்தின் தெற்கு பிரிவுக்கு பொறுப்பாக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்திக்க கப்பு கொட்டுவ வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி நேற்றையதினம் மதத் தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் இந்திக்க கப்பு கொட்டுவ தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திக்க கப்பு கொட்டுவ முன்னதாக வவுனியா போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியாக செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

