சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ். நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த அக்டோபர் 08ஆம் திகதி நெடுந்தீவு கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 30 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்படி, 30 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மன்னார் மீன்வள பரிசோதகர் அலுவலகம் மற்றும் கடற்படையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply