யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

யாழ். குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் 55 வயதுடைய சண்முகவடிவேல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் நேற்று அதிகாலை அவரது வீட்டுக்கு அருகேயுள்ள உறவினர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சாட்சிகளை அச்சுவேலி பொலிஸார் பதிவு செய்தனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply