கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழப்பு!

காலி – பிலான பகுதியில் கழிவறை குழி வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (12) மாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டில் உள்ள கழிவறை குழியில் கார்பைடைப் பயன்படுத்தி எரிவாயு தயாரிக்க முயன்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

50 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply