சகோதரருடன் ஏற்பட்ட முறுகல் நிலை- கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை!

குருநாகல், குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பெப்போலேவெல, குடா கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

குறித்த நபர் தனது சகோதரரின் வீட்டில் வேறொரு குழுவுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.

இதன்போது சகோதரருடன் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

சகோதரருடன் ஏற்பட்ட முறுகல் நிலை தீவிரமடைந்ததில், சகோதரர் அவரை வாளால் தாக்கி கொலை செய்துள்ளார்.

தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் முன்னடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply