இந்தியா சென்ற பிரதமர் ஹரிணிக்கு வரவேற்பு!

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்று இந்தியாவுக்கு செல்லும் முதல் விஜயமாக இது அமைந்துள்ளது.

NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாடு நாளையதினம் (ஒக்டோபர் 17 ஆம் திகதி) நடைபெறவுள்ளது.

இந்த உச்சி மாநாட்டில் “நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்” என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது

இதன்பொருட்டு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரி இன்று (16) அதிகாலை சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 191 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு சென்றுள்ளார்.

புது டில்லியை சென்றடைந்த பிரதமரை இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மஹிசினி கொலொன்னே உள்ளிட்ட குழுவினர் சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்றனர்.

பிரதமர் இன்று (16) முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரை இந்தியாவில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது பிரதமர் ஹரிணி, ​​இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply