பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்த இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பொலிஸ் தலைமையக வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமால் பிரசாந்தவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை நிமித்தமாகவே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் தெரிவிப்பவர்களுக்கு வழங்க வேண்டிய 5 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியமை, நிர்வாக பலவீனங்கள் மற்றும் மூன்று மாதங்களுக்குள் போதைப்பொருள் சோதனைகளை முறையாக நடத்தத் தவறியமை உள்ளிட்ட குற்றசாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
5 மில்லியன் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஏற்கனவே விசாரணைகளை தொடங்கியுள்ளது.
அதன்படி, அவரை இடமாற்றம் செய்ய செப்டம்பர் 25ஆம் திகதி பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.
நேற்று (15) அதனுடன் தொடர்புடைய உத்தரவு கிடைத்த நிலையில், அவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையக வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எனினும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவின் இடமாற்றம் தொடர்பாக இதற்கு முன்னர் வௌியாகிய தகவல்கள் முற்றிலும் தவறானவை என பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
