இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மீண்டும் கடல் வழியாக இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
மன்னாரைச் சேர்ந்த குறித்த குடும்பத்தினர் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் கோரிய நிலையில் நீண்ட நாட்களாக முகாமில் வசித்து வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்தநிலையில் தற்போது போர் நிறைவடைந்து இலங்கையில் இயல்பு நிலை திரும்புவதாக அறிந்ததையடுத்து, நேற்று முன் தினம் (14) இரவு தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர்.
நாட்டுக்கு வருகை தந்தவர்கள் தாமாகவே பேசாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதையடுத்து குறித்த நால்வரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
