பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்றையதினம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த ஜெய்சங்கர், இன்று (16) காலை புதுடில்லியில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் தெரிவித்தார்.
இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தோம் என அவர் ‘X’ இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிநுட்ப உதவி உள்ளிட்ட பல ஒத்துழைப்பு செயற்பாடுகளில் இந்தியா இலங்கைக்கு பக்கபலமாக இருக்கும் எனவும் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளதாக புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.
