“International Art & Heart Film Festival – 2025” சர்வதேச குறுந்திரைப்பட விழா அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல் நகரில் நடைபெற்றது.
இந்த விழாவில் மன்னாரைச் சேர்ந்த இளைஞர் கவிவர்மன் இயக்கிய “மடமை தகர்” எனும் குறுந்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த குருஸ் சுவேதா என சிறுமிக்கு “Best Monologue” என்ற விருது கிடைக்கப்பெற்றுள்ளது.
விருதை வென்ற சிறுமி ஓலைத்தொடுவாய், சின்ன கரிசல் பிரதேசத்தைச் சேர்ந்த ரஞ்சித் குருஸ் சுவேதா என்பவராவார்.
‘தற்கொலை என்பது ஒரு தீர்வல்ல’ என்பதை மையக்கருவாகக் கொண்டு மன்னாரைச் சேர்ந்த இளைஞர் கவிவர்மனால் உருவாக்கப்பட்ட “மடமை தகர்” குறுந்திரைப்படம், இதற்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சர்வதேச குறுந்திரைப்பட விழாவில் “சிறந்த இயக்குநர்” என்ற விருதையும் வென்றிருந்தது.
இப்போது மீண்டும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதால், நாட்டுக்கும், மன்னார் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
“மடமை தகர்” குறுந்திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி குருஸ் சுவேதா என்ற சிறுமி முதன்முறையாக ஒரு சர்வதேச நாட்டில் சிறந்த நடிப்பிற்கான விருதை பெற்றிருப்பது வளர்ந்து வரும் இளம் சமுதாயத்தினருக்கு நம்பிக்கையாகவும் அமைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது.
